‘தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம்’ – யார் இவர்?! | Muruganandam has been appointed as the new Chief Secretary of the Government of Tamil Nadu

இதையடுத்து முருகானந்தத்துக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது என்கிற கேள்வியுடன் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தோம், “தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்தார், சிவ்தாஸ் மீனா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் பட்டியலிலிருந்தார். பிறகு மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு சிவ்தாஸ் மீனா மீண்டும் மாநில அரசுப் பணிக்கு வந்தார். ஸ்டாலின் குட் புக்கில் இடம்பெற்றதால் தலைமைச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

முருகானந்தம் முருகானந்தம்

முருகானந்தம்

இந்நிலையில் முருகானந்தத்துக்கு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிவதாஸ் மீனாவுக்கும் இதில் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதாவது தற்போதைய பதவியிலேயே சிவதாஸ் மீனா இருந்தால் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்கிறார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால், 62 வயது வரையில் சிவ்தாஸ் மீனா பணியாற்ற முடியும். அதாவது ஆணையத்தில் பணியாற்றுவோருக்கு ஓய்வு பெரும் வயது 62 ஆகும். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *