நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை டி.எஸ்.பி.எஸ்.சி (TNPSC) நிர்வாகம் நேற்று வெளியிட்டிருந்தது. அதில், தொல்லியல் துறையில் உதவி காப்பாட்சியர் பணிக்கு, `சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும். அல்லது, தொல்லியலில் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) மற்றும் திராவிட மொழிகள் மற்றும் எழுத்துகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு ஆகியவற்றில் அறிவு. மேற்படி கல்வித் தகுதியுடன் கூடிய தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் வரலாறு பட்டத்துடன் சமஸ்கிருத பணி அறிவு பெற்ற தேர்வர்கள் கருதப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் என்றும் இதுதான் திராவிட மாடலா என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியிருக்கிறார்.