தமிழக மீனவர்கள் படகை மோதி மூழ்கடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்; இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்! | indian embassy condemned srilankan govt for its brutal action on indian fishermen

படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *