சிவகாசி பட்டாசு ஆலை சங்கத்தினர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினருடன் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்துரையாடல், சிவகாசியில் தனியார் இடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும், பட்டாசு ஆலைக்கு நேரில் சென்ற அவர், பாதுகாப்பான முறையில் பட்டாசு தயார் செய்வது, பட்டாசு தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
`தமிழர்கள்மீது பாசம்கொண்ட மலையாளியாக பட்டாசு தொழிலுக்கு வாதாடுவேன்’- மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி | Central minister Suresh Gopi visited Sivakasi fireworks factory
