தமிழ்நாடு அரசு அரசாணை – News18 தமிழ்

ஒருங்கிணைந்த நலன் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயல்திட்டங்களை வகுக்கும் வகையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ், நிபா வைரஸ் உள்பட விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன்சார்ந்து One Health அணுகுமுறையை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.

அதில் வரும் சவால்களை சமாளிக்கும் வகையில், முக்கியமான ஏழு துறைகள், மாசுக்கட்டுப்பாடு வாரியம், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அடங்கிய 23 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இக்குழுவில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும் மருத்துவருமான சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இயக்குனர் கல்பனா பாலகிருஷ்ணன், யுனிசெஃபின் அனன்யா கோஷல், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:
இன்றும் நாளையும் வெளுக்கப்போகும் கனமழை – வானிலை மையம் அலெர்ட்

இக்குழு, விலங்கியல் நோய்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் உந்தப்படும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது, மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவது உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *