ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் அதிகரிக்கும் மாவட்டங்களாக உள்ளது. அங்கு 30 சதவீதம் பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 97 பேருக்கு புற்று இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “புற்று நோய் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதனால் முதல்வரின் முயற்சியால் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 220 கோடி கட்டப்பட்டு வருகிறது. அடுத்த 6,7 மாதங்களில் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
மும்பையில் உள்ள டாட்டா மெமோரியல் இன்ஸ்ட்டியூட் எப்படி இருக்கிறதா அதேபோல் அண்ணா புற்று நோய் ஆராய்ச்சி மையம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 2 இடங்களில் மட்டுமே
பெட் ஸ்கேன் எடுக்கும் வசதி இருந்தது.
தற்போதுகோவை,நெல்லை,சேலம் உட்பட 5 மாவட்டங்களில் புதிதாக பெட் ஸ்கேன் எடுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படவுள்ளது.
ஈரோடு பெரிய அளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் ஆரம்ப நிலையில் கண்டறிய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருப்பத்தூர், ஈரோடு, ராணிப்பேட்டை, நாகர்கோவில் 4 மாவட்டங்கள் புற்றுநோய் கண்டறிய சோதனை நடத்தப்பட்டது.
இந்த 4 மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலை, ரப்பர் பதனிடும் தொழிற்சாலை உள்ளதால் இந்த 4 மாவட்டங்களில் 30% பேருக்கு சோதனை நடைபெற்றது. இதில் 97 பேருக்கு தொடக்க நிலையில் புற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி : உதயநிதி உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்பு… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
4 மாவட்டத்தில் செய்ததைப் போல அனைத்து மாவட்டத்திலும் புற்று நோய்க்கான ஸ்க்ரினிங் ஒர்க் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
.