இந்த நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அபிநயாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் சீமான். 28 வயதே ஆகும் அபிநயாவின் சொந்த ஊர், விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமம்தான். அவரின் கணவர் பொன்னிவளவன். விவசாய குடும்பம் என்றாலும், அபிநயா சிறந்த தடகள வீராங்கனையும் ஆவார். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
மேடைப் பேச்சு, விவாத அறிவிலும் அசத்தக்கூடியவர் என்கிறார்கள் நாம் தமிழர். ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை மருத்துவம் படித்து, மகாராஷ்டிராவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அபிநயாவின் கணவர் பொன்னிவளவன் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். கணவருடன் சேர்ந்து சீமானின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவருக்கு ‘அடிப்படை அமைப்பு… அரசியல் மாற்றம்’ என்ற சீமானின் கொள்கை முழுக்கப் பேச்சால் ஈர்க்கப்பட்டு, தேர்தல் அரசியலிலுக்குள் வந்திருக்கிறார் அபிநயா பொன்னிவளவன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88