கடந்த முறை வெற்றிபெற்ற அதே மூவருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தென் சென்னையில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அதே தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.பி-யான ஜெயவர்தனன் போட்டியிட்டிருந்தார். சிட்டிங் எம்.பி-யான தமிழச்சி மீது ஒருசில அதிருப்தி நிலவுவதால் அந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்று பேசப்பட்டது. இருந்தபோதிலும், வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே தமிழச்சிக்கு ஏறு முகமாகவே இருந்தது.
முடிவில் தமிழச்சி பெற்ற வாக்குகள் 4,62,377. தமிழிசையைப் பொறுத்தவரை 2,65,530 வாக்குகளையும், ஜெயவர்த்தன் 79,074 வாக்குகளும் பெற்றிருந்தார். தென் சென்னையின் நிலைதான் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் நிலவியது. அதிலும் வடசென்னையைப் பொறுத்தவரை திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த மனோ 1,58,111 வாக்குகளையும், பாஜகவைச் சேர்ந்த பால் கனகராஜ் 1,13,318வாக்குகளையும் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்டத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 3.3 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு தொகுதிகளும் இப்படியிருக்க மத்திய சென்னையில் தயாநிதி மாறன் தொடக்கம் முதலே ஏறி மேலே வந்துகொண்டே இருந்தார். தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகளையும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகளையும் [பெற்றுள்ளார். மொத்தமாக 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றிருக்கிறார்.
சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளையும் தாண்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88