சென்னை மாநகர காவல் ஆணையரைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, அருண் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை மாநகரத்தில் இரு கூடுதல் ஆணையர்களும் பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளராக இருந்த அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக இருந்த நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜி ஆக இருந்த கண்ணன், சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தாம்பரம், சேலம், திருப்பூர் மாநகர காவல் ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் ஆணையராக இருந்த அமல்ராஜ், மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவணப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக், தாம்பரம் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆணையராக இருந்த விஜயகுமாரி, சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், திருப்பூர் ஆணையராக இருந்த பிரவீன் குமார் சேலம் மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஆயுதப்படை ஐஜி ஆக இருந்த லட்சுமி திருப்பூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜி ஆக இருக்கும் டிஎஸ் அன்பு-க்கு, அதே துறையின் ஏடிஜிபி பணியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாமா? – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சிபிசிஐடி ஏடிஜிபி ஆக இருந்த ஜி.வெங்கட்ராமன், டிஜிபி அலுவலகத்தின் நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
.