அதாவது, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான, அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான தன்னை அழைக்காமல் இப்படி ஓரங்கட்டுகிறார்கள் என்ற கோபத்தில் அப்படி கமெண்ட் போட்டு தனது உள்ளக்கிடகையை அவர் வெளிப்படுத்தியதாக அவர் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் அந்த பதிவில் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பதிவிட்ட அந்த ‘பகீர்’ கமெண்ட் உடனேயே நீக்கப்பட்டது.
“அந்த கமெண்டை நீக்கியது அமைச்சர் கே.என்.நேரு தரப்புதான்” என்று சௌந்தரபாண்டியன் தரப்பு குற்றம்சாட்டியது. அதோடு, கே.என்.நேருவின் இந்த பாராமுகத்தை கட்சி தலைமையும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால், அண்ணன் ராஜினாமா பண்ண முடிவு செய்து, கடிதம் கொடுக்க இருக்கிறார் என்று சௌந்தரபாண்டியன் முடிவுசெய்திருப்பதாக ஒரு தகவல், திருச்சி மாவட்ட தி.மு.க-வில் ஹாட் டாக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இந்த விவகாரம் தொடர்பாக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனை அழைத்துப் பேசிவிட்டேன்” என்றவரிடம், “சௌந்தரபாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுக்க இருக்கிறாராமே?” என்று கேள்வி எழுப்பியதற்கு, பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88