திமுக vs பாஜக… கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் – அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?! | DMK and BJP keeps saying that there are more rowdies in the opposite party

“தமிழக பாஜக ரெளடிகளின் கூடாரம்”

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக திமுக-வின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “பாஜக-வில் ரெளடிகள் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும். பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ‘நான் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகளைக் கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. இப்போது அப்படிப்பட்ட ரெளடிகள் சிலர் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். உண்மைதானே… குற்றப்பின்னணியில் இருப்பவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது. கட்சியில் சேர்ந்த பலரும் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாகவே இருந்தனர். தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொள்பவர்கள் எல்லாம் பாஜகவில் மட்டுமே இருக்கிறார்கள். கிட்டத்தட்டத் தீவிர குற்றப் பின்னணியில் இருக்கும் 260-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கட்சியில் பதவி கொடுத்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதுவும் சாதாரண வழக்குகள் கிடையாது, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற தீவிர குற்ற வழக்குகள். இதனை அனைத்தையும் மக்கள் மன்றத்தில் திமுக அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜக ரெளடிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அண்ணாமலைக்கு அரசியல் தெரிகிறதோ இல்லையே, ஆடியோ, வீடியோ வைத்து அரசியல் செய்யவும், பின்னணியில் இருப்பவர்களை வைத்து அரசியல் செய்யவும் நன்றாகத் தெரியும். அண்ணாமலை வெளியிட்டது ஒரு போலியான பட்டியல், அதில் திமுக நிர்வாகியின் உறவினர், பிரமுகர் என்றுதான் பெரும்பாலான பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. நாங்கள் பாஜகவில் மாநில பொறுப்பில், அணியின் தலைவர்களாக இருப்பவர்கள் குற்றப்பின்னணியில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். திமுக குறித்துப் பேச அண்ணாமலைக்குத் துளியும் அருகதை கிடையாது” என்றார் விரிவாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *