திருச்சி SRM ஹோட்டலை கையகப்படுத்த சென்ற அதிகாரிகள்; நீதிமன்றத்தை நாடிய நிர்வாகம்! – என்ன நடந்தது? |stir after tourist officials attempted to overtake srm hotel in trichy

ஏற்கெனவே பலமுறை நினைவூட்டியும் அவர்கள் ஹோட்டலை தர மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்தனர். இதனிடையே, ஹோட்டலிற்கு வந்த இந்திய ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜ.க-வினர், “ஹோட்டலிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்காததால், சிலர் அங்கிருந்த சுவரில் ஏறி குதித்து ஹோட்டலிற்குள் சென்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ‘ஹோட்டலை அரசு கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என வழக்கு தொடரப்பட்டது.

எஸ்.ஆர்.எம் ஹோட்டல்எஸ்.ஆர்.எம் ஹோட்டல்

எஸ்.ஆர்.எம் ஹோட்டல்

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ‘வரும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்துள்ளார். அப்படி நீதிமன்ற உத்தரவு வந்ததை அறிந்த இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், ஹோட்டலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், காலை முதல் ஹோட்டலை கையகப்படுத்த வந்த சுற்றுலாத்துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். சுற்றுலாதுறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தினர் அமைத்துள்ள ஹோட்டலை கையகப்படுத்த வந்த அதிகாரிகளால், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *