“திருமாவளவன் எப்போது CBI அதிகாரியாக மாறினார்?” – கேட்கிறார் பாஜக இராம.ஸ்ரீநிவாசன்

“காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறதே..!”

“நீர்திறப்பிலும் சரி, அணை கட்டுவதிலும் சரி காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க, கர்நாடகத்தில் காங்கிரஸ் இருக்கும்போது பிரதமர் மோடி குரல்கொடுக்க வேண்டுமா.. எதற்கெடுத்தாலும் வக்கணையாக பேசும் ராகுல் காந்தி குரல் கொடுக்கமாட்டாரா..?”

மோடி – ராகுல் காந்தி

“விக்கிரவாண்டியில், தி.மு.க-வுக்கு வாக்களிப்போமே தவிர பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என அ.தி.மு.க ஆதவாளர்கள் முடிவெடுத்தது குறித்து?” 

“தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும்போது பா.ம.க-வை ஜெயிக்க வைத்தால் எம்.எல்.ஏ-வுக்கு வாய்ஸ் இருக்காது. தொகுதிக்கு திட்டம் வராதோ என்றும் மக்கள் இம்முடிவை எடுத்திருக்கலாம். . அ.தி.மு.க வாக்குகளை பொறுத்தவரை நேரடியான நிர்வாகிகளின் வாக்குகள் பா.ம.க-வுக்கு வந்திருக்கலாம். ஆனால் அ.தி.மு.க ஆதரவு வாக்குகள் தி.மு.க-வுக்கு போயிருக்கிறது. விக்கிரவாண்டியில் நடந்தது `Buy Election’ தானே.”

“`Buy Election’ என்கிறீர்களே தி.மு.க மட்டும்தான் பணம் கொடுத்ததா?”

“பாட்டாளி மக்கள் கட்சி, பணம் கொடுத்தார்களா எனத் தெரியவில்லை. கொடுத்திருக்க மாட்டார்கள் என நம்புகிறார்கள்”

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

“2026-ல் பா.ம.க கூட்டணிக்கு வரவேண்டும் என கணக்கில் அ.தி.மு.க தேர்தலை புறக்கணித்ததையெல்லாம் கவனிக்கிறதா பா.ஜ.க?”

“அதெல்லாம் கிடையாது. `டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றால் கேவலம்’ என நினைத்துதான் அ.தி.மு.க போட்டியிடவில்லை”

“எடப்பாடி துரோகி’ என அண்ணாமலை பேசியதுதால்தான் அ.தி.மு.க வாக்குகள் பா.ம.க-வுக்கு வராமல் போய்விட்டதாக சொல்கிறார்களே!” 

“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் கருத்தை பிரசாரத்தில் வெளிப்படுத்தினார். எடப்பாடியை விமர்சித்து பேசியதால்தான் பின்னடைவு எனச் சொல்வதை ஏற்க முடியாது. அவர் அப்படி பேசாவிட்டால் அ.தி.மு.க வாக்குகள் அப்படியே பா.ம.க-வுக்கு வந்திருக்குமா…?

“அண்ணாமலை மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்களா?”

“இந்த கேள்வியை பா.ஜ.க-வின் தேசிய தலைவர் நட்டாவுக்கு நான் சமர்பிக்கிறேன்”

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆருத்ராவையும் பாஜக-வை தொடர்பு படுத்தும் விதமாக பேசிவருகிறாரே திருமாவளவன்?”

“திருமாவளவன் எப்போது சி.பி.ஐ போல புலனாய்வு நிறுவனமாக மாறினார் எனத் தெரியவில்லை. இருந்தாலும் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆருத்ரா இல்லை யாராக இருந்தாலும் விசாரிக்கப் பட்டு குற்றவாளி அம்பலப்படட்டும்.!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *