`திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள சம்பளம் தரவேண்டும்; அந்தப் பணம்..!’ – மத்திய அமைச்சரான சுரேஷ் கோபி | Suresh gopi says, will collect money fro shop openings

நான் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். சுரண்டி பிழைக்க நான் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் 5 முதல் 8 சதவிகிதம் தொகையை நான் நல்லகாரியங்களுக்கு செலவு செய்கிறேன். அதற்கான உரிமை எனக்கு உண்டு. அப்படி வரும் பணத்தை நான் தனிநபர்களுக்கு கொடுக்கமாட்டேன். மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்வேன். அதற்காக வேறு யாரிடமும் பணம் வசூலிக்கமாட்டேன். ஒருவகையில் மட்டும் பணம் வசூல் நடத்தப்படும். தனியார் திறப்பு விழாக்களுக்கு எம்.பி-யை வைத்து திறக்கலாம் என நினைக்க வேண்டாம். திறப்பு விழாவுக்கு சினிமா நடிகராகத்தான் வருவேன். அதற்கு ஏற்ற சம்பளம்  வாங்கிவிட்டுதான் வருவேன். என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்பு விழாவுக்கு போவேன்.

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிமத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது கிடைக்கும் பணத்தில் ஒரு நயா பைசா கூட நான் எடுக்கமாட்டேன். அது எனது டிரஸ்டுக்கு போகும். டிரஸ்ட் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். திருச்சூரில் உள்ள மக்கள் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார்கள். கட்சி எனக்கு வழங்கியுள்ள கடமையை நிறைவேற்ற எனக்கு தெரியும். அதை செய்வதற்கு யாருடய அறிவுரையும் எனக்கு தேவையில்லை.  அதை நடத்துவதற்காக திறமை எனக்கு உண்டு. இறைவன் அருள் இருந்தால் அதற்கு மேலேயும் செய்வேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *