தி.மு.க Vs பா.ம.க Vs நா.த.க – விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு?! | DMK Vs PMK Vs NTK – Who will ADMK vote in Vikkiravandi?

தற்போதைய நிலைமையில் பா.ம.க கணிசமான ஓட்டு வாங்கினால், அவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க-வை வைத்து பெரும் திட்டமொன்றை எடப்பாடி கையில் வைத்து இருக்கிறார். அதேநேரத்தில் அவர்களை பகைத்துக் கொள்ளவும் கூடாது என்றுதான், எம்.ஜி.ஆர்., அம்மா படங்களை பயன்படுத்தும் பா.ம.க-வுக்கு அரசியல் பதில் கொடுக்காமல், “எங்கள் தலைவர்களின் படங்களை பயன்படுத்துவது பெருமையாக இருக்கிறது’ நழுவி கொண்டார். மறுபக்கம் இடைத்தேர்தலில் நா.த.க-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துவிட்டால், அதைவைத்து அவர்கள் விளம்பரம் தேடுவார்கள். நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ஆதரவு கேட்டு வாங்கி, நாளைக்கே அதிமுகவுக்கு எதிராக பேசுவார். எனவே, அவருடன் நெருக்கமானவது அரசியல் தற்கொலைக்கு சமம். எனவேதான், இடைத்தேர்தலுக்கு நேரடியாக ஆதரவு கேட்டும் பதில் தர மறுத்துவிட்டார் எடப்பாடி.

அன்புமணி, எடப்பாடி பழனிசாமிஅன்புமணி, எடப்பாடி பழனிசாமி

அன்புமணி, எடப்பாடி பழனிசாமி

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை. நாம் போட்டியிடவில்லை… அதனால் யார் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அது நமக்கு தேவையில்லை… என்ற எண்ணத்தில்தான் இருக்கிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஒரு கட்சிக்கு மடை மாற்றிவிடக்கூடாது என்று தலைமை மிக உறுதியாக இருப்பதால்தான், ஆதரவு விஷயத்தில் மிக கவனமாக இருக்கிறது. மறுபக்கம், அதிமுக தொண்டர்கள் பா.ம.க திரும்பும் சூழ்நிலை இருந்தது. ஆனால், ‘ அதிமுக குறித்து விமர்சனம் செய்து அண்ணாமலையே… அதை முறியடித்துவிட்டார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே… ” என்றார் சூசகமாக.

வாக்கு பதிவு தேதி நெருங்க நெருங்க… அதிமுக ஆதரவாளர்களுக்கு பாமகவும் நா.த.க-வும் வைக்கும் ஐஸ் பல மடங்காகவும் வாய்ப்பு இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *