இந்த கூட்டத்தில் எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஜெயலெட்சுமி, 4-வது வார்டு உறுப்பினர் சுபா, 5-வது வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி, 6-வது வார்டு உறுப்பினர் சத்தியா நாராயணலட்சுமி மற்றும் 7-வது வார்டு உறுப்பினர் பூமாரியம்மா மற்றும் கிராம மக்கள் என, 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பொட்டலூரணி கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிவுமீன் ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொட்டலூரணி கிராம மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது பொட்டலூரணி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து பொட்டலூரணியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.