சட்டத்துறை அமைச்சர் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார். சடட்சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் என்று முதல்வர் சொல்லியிருக்க வேண்டும். 58 பேர் இறந்த பின்னர்தான் கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிவிட்டோம், அதோடு முடிந்து விட்டது என்கிறார் முதலமைச்சர். எங்களுக்கு சிபிஐ விசாரணை நடத்தியே ஆக வேண்டும். போலீஸார் இன்று சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறதா? காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவோம். நீங்கள் அடக்குமுறையை கையாண்டால், அதிமுக தொண்டர்கள் தகர்த்து எறிவார்கள். உயிர் காக்கும் மருந்து, கள்ளச்சாராய முறிவுக்கு மருந்து கையிருப்பு இருக்கிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். இந்த போராட்டம் ஒரு ட்ரையல்தான்..” என்றார்.