இதனால், அப்பகுதியினர் இரவோடு இரவாகப் போராட்டத்தில் இறங்கினர். மேலும், பலியான சிறுமியின் தாத்தா, `நாங்கள் இங்கு தற்காலிக வீடுகளில் வசிக்கிறோம். தொடர்ந்து நாய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் எத்தனையோ முறை புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். பின்னர், இதுகுறித்து பேசிய காவல் உதவி ஆணையர் (ஏசிபி) அமர்நாத் யாதவ், போராட்டம் காலையில் முடிவுக்கு வந்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி அரசுக்கு கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேற்று நேரில் வந்த மேயர் பிரமிளா பாண்டே, அப்பகுதியில் இருக்கும் இறைச்சிக்கடைகளை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார். மேலும் இதற்கான காரணமாக, `இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக அளிப்பதால் அவை ஆக்ரோஷமாக மாறுகின்றன‘ என்று அவர் கூறினார். அதையடுத்து, இறைச்சிக்கடைகளை இடிக்க வந்த புல்டோசர்களை அதன் உரிமையாளர்கள் நிறுத்துமாறு முறையிட்ட போதும், மேயர் தனது உத்தரவைச் செயல்படுத்தினார். பின்னர், மீண்டும் கடைகளைத் திறந்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.