தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நுழைவுத் தேர்வில் கல்வராயன் மலைப்பகுதி மாணவ, மாணவி வெற்றி

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவி இருவர் பேஷன் டெக்னாலஜி எனப்படும் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியின் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையின் கடைக்கோடியில் உள்ள மணியார்பாளையம் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி பழனியம்மாள் மற்றும் அதே பள்ளியில் அவருடன் படித்த மாணவர் தவமணி ஆகிய இருவரும் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி (National Institute of Fashion Technology, NIFT)-யின் நுழைவு தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

விளம்பரம்

ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மரவள்ளி பயிர் செய்தும் கூலி வேலைக்குச் சென்றும் குடும்பம் நடத்தி வரும் பெற்றோரின் நிலையை உணர்ந்து மாணவி பழனியம்மாள் அவர்களுக்கு உதவியாகவும் குடும்பத்தில் முதல் பெண்ணான தான் படித்து முன்னேற வேண்டும் என்ற விடாமுயற்சியுடன் பள்ளியில் சிறந்த மனைவியாக படித்து வந்துள்ளார்.

Also Read :
மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அப்போது  தாவரவியல்  ஆசரியையின் அறிவுறுத்தல்படி தேசிய உடை அலங்கார தொழில்நுட்ப கல்லூரிக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து  அதற்கான தேர்வு எழுதி தற்பொழுது வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து மாணவி பழனியம்மாள் கூறுகையில் சாதாரண எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த நான் நன்கு படித்து வேலைக்கு செல்ல வேண்டும் ,பெற்றோருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடாமுயற்சியுடன் படித்ததாகவும் அதற்கு காரணமாக இருந்த தனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதே போல் பழனியம்மாள் படித்த அதே பள்ளியில் மேல்ஆத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிளியின் மகன் தவமணி என்ற மாணவனும் தனது ஆசிரியரின் ஆலோசனையின் பெயரில் NIFT -கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்று இருவரும் சென்னையில் உள்ள தேசிய உடை அலங்கார தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து மாணவர் தவமணி கூறுகையில்எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு பெரும் உதவியாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

விளம்பரம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *