ஸ்டாலின் – ராகுல் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் கோவையில்தான் நடத்தப்பட்டது. ஆளுங்கட்சி, கூட்டணி ஆகியவற்றுடன் இந்த வியூகங்களும் திமுக வெற்றிக்கு காரணம். முக்கியமாக கோவையின் வெற்றி தலைவரை உற்சாகப்படுத்தியுள்ளது. அதனால் வெற்றி விழாவை அங்கு நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். செட்டிப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் – ராகுல் கலந்துகொண்ட அதே பகுதியில் 40 எம்.பிக்களை ஒரே மேடையில் ஏற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக விழாவை கொடிசியா மைதானத்தில் மாற்றி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு 5,000 பேர் வீதம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட டார்கெட் வைத்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி விழாவாக மட்டுமல்லாமல், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அஸ்திவாரமாக அந்த விழாவை நடத்துவதுதான் திமுக-வினரின் திட்டம்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88