அந்த இடத்தில் வேறு அமைச்சர்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருப்பாரா அமித் ஷா… இதுதான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை’ என சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மேடையில் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா என்னப் பேசினார் என்பது குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில், `கூட்டணி விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் சில கருத்துகளை பேசி இருந்தார். அதைதான் அமித் ஷா கண்டித்தார். அண்ணாமலைக்காக அமித் ஷாவே பேசியிருக்கிறார்’ எனப் பல யூகங்களும் பேசப்பட்டது.
இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,“2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து கேட்க என்னை அழைத்தார். மற்றும் மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் என்னை அறிவுறுத்தினார். இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்துவதற்காகும்” எனக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88