ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதில், நவீன் பட்நாயக்குக்கு மிக நெருக்கமானவரான வி.கே.பாண்டியன் மற்றும் பூரி ஜெகந்நாத் கோயில் கருவூல அறையின் காணாமல்போன சாவி குறித்து மேடைதோறும் பா.ஜ.க கேள்வியெழுப்பி வந்தது. அமித் ஷா கூட, `வயதாகிவிட்டதால் நவீன் பட்நாயக் ஓய்வுபெற்றுவிடலாம். ஒடிசாவை தமிழர் ஆள அனுமதிக்கக் கூடாது’ என மேடைகளில் கூறினார்.
இத்தகைய சூழலில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதுக்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதாக நேரடியாகவும், அதற்கு வி.கே.பாண்டியன் தான் காரணமா என்று மறைமுகமாகவும் பிரதமர் மோடி பகிரங்கமாக ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார். முன்னதாக, நேற்று பிஜு ஜனதா தளம் கட்சியின் பிரசார மேடையில் நவீன் பட்நாயக் பேசும்போது அவரின் நடுங்குவதைக் கண்ட வி.கே.பாண்டியன், கையை மறைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவின.
இதுகுறித்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா, `நவீன் பட்நாயக்க்கின் கைகளைக்கூட வி.கே.பாண்டியன் தான் கட்டுப்படுத்துகிறார்’ என அந்த வீடியோவைப் பதிவிட்டு விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ஒடிசாவின் பரிபாடாவில் இன்று நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் உரையாற்றிய மோடி, “முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா… அவர் சார்பாக ஆட்சி நடத்தும் லாபிதான் இதற்கு காரணமா…
ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும்” என்று கூறினார்.
நவீன் பட்நாயக்குக்கு பின்னாலிருந்து வி.கே.பாண்டியன் தான் அரசை நடத்துவதாக இதுநாள் வரை பா.ஜ.க குற்றச்சாட்டைக் கூறிவந்த நிலையில், அவரின் உடல்நிலை மோசமானதற்கும் வி.கே.பாண்டியன்தான் காரணமா என மோடி மறைமுகமாக தற்போது கேட்டிருக்கிறார். மோடி இதற்கு முன்னர்கூட ஒரு பிரசாரத்தில், பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb