நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 இடங்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. 24 இடங்களில் மட்டுமே இரண்டாம் பிடித்திருக்கிறது.
இந்த நிலையில், 2019, 2024 என இரண்டு மக்களவைத் தேர்தலிலும் சேர்த்து மொத்தமாகவே ஒரேயொரு இடத்தை மட்டுமே அ.தி.மு.க வென்றிருக்கிறது. இப்படியிருக்க, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இப்படி படுதோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்திருக்கும் மோசமான தோல்விக்கு காரணம் என்ன?” என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `உட்கட்சி பிரச்னை, கூட்டணி சரியில்லை, வேட்பாளர் தேர்வு, ஆளும் கூட்டணியின் வலிமை’ என நான்கு விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.