இந்நிலையில் இந்திய கடல் பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பாம்பனை சேர்ந்த இருதயராஜ் படகில் சென்ற இருதயராஜ், மிக்கேல் அந்தோணி, கிராசியன் உள்ளிட்ட 5 மீனவர்கள், ஜார்ஜன் என்பவரது படகில் சென்ற ஜார்ஜன், அமலதாஸ் உள்ளிட்ட 6 மீனவர்கள், ஸ்டீபன் என்பவரது படகில் சென்ற மைக்கேல், முருகன் உள்ளிட்ட 7 மீனவர்கள் மற்றும் தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் உள்ளிட்ட 25 மீன்வர்களையும் அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து யாழ்பாணம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் ஒரே நாளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட செய்தி, பாம்பன் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாம்பன் கடற்கரையில் திரண்ட மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.