`நீங்கள்தானே என்னைத் தோற்கடித்தீர்கள்’ – நவீன் பட்நாயக் மீண்டும் சட்டசபை சென்றபோது… நெகிழ்ச்சி! | Odisha Former CM Naveen Patnaik congratulated opposition MLA who defeated him in election

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 82 எம்.எல்.ஏ-ஏக்கள் உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவிப் பிரமாணம் முடிந்த பிறகு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவையிலிருந்து கிளம்பினார். அப்போது, காந்தபாஞ்சி தொகுதியில் அவரை வீழ்த்தி முதல்முறையாக எம்.எல்.ஏ-வான பா.ஜ.க அமைச்சர் லக்ஷ்மண் பாக், நவீன் பட்நாயக் அருகில் வந்தபோது எழுந்து நின்று கைகூப்பி வணங்கி `எப்படி இருக்கிறீர்கள்” என நலம் விசாரித்தபடி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அப்போது, `ஓ நீங்கள் தானே என்னைத் தோற்கடித்தீர்கள்’ என்று கூறிய நவீன் பட்நாயக் அவரை வாழ்த்திச் சென்றார். மறுபக்கம், அவையில் முதல்வர் மோகன் சரண் மஜி உட்பட அனைவரும் எழுந்து நின்று 24 ஆண்டுகாலம் முதல்வராகப் பணியாற்றிய நவீன் பட்நாயக்குக்கு மரியாதை செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *