`நீட்டிக்கப்படுமா பதவிக்காலம்?’ – ஆளுநர் ரவியின் ‘நீ…ண்ட’ டெல்லி விசிட் பின்னணி! | What is the background of Governor Ravi’s ‘long’ visit to Delhi?

பின்னணி என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் பேசினோம். “டெல்லியில் ஆளுநர் – பிரதமர் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. விரைவிலேயே ஆளுநரின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஒன்று, மத்திய அரசு அவரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும். அல்லது ரவிக்கு பதிலாக வேறு யாரையாவது மாற்ற வேண்டும். இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமே ஆளுநர் பதவியிலிருந்து தன்னை டெல்லிக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் பிரதான கோரிக்கையாக இருந்திருக்கிறது என்கிறார்கள். பாதுகாப்பு தொடர்பான பணியில்தான் ஆர்.என்.ரவி விருப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவிஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

இது தொடர்பான தனது கோரிக்கையைப் பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டிருக்கிறார். அதற்கு பிரதமர் அலுவலகம், `இன்னும் கொஞ்ச காலம் ஆளுநராக உங்கள் பதவியைத் தொடருங்கள். மற்றவற்றைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என்று பதில் சொல்லி அனுப்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள். அமித் ஷாவைச் சந்தித்தபோதும், மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அவரும் பிரதமர் அலுவலகம் சொன்ன அதே பதிலையே ரவிக்குச் சொல்லியிருக்கிறாராம். தற்போதைய நிலையில், கேரளாவின் ஆளுநரை மாற்றிவிட்டு, அங்கு வேறொருவரை மாற்றும் திட்டமும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ரவியைக் கேரளாவுக்கு மாற்றிவிட்டு, கேரள ஆளுநரைத் தமிழகத்துக்கு மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. வேறு சில மாநிலங்களுக்குக் கூடுதல் ஆளுநர்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். அவற்றுக்கு ஆளுநர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்கள் விரிவாக!.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *