ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டைக் கண்டறிய வேண்டும்.
கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்.
மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்
மேற்குறிப்பிடப்பட்டிருப்பவை உள்ளிட்ட பரிந்துரைகளை சந்துரு வழங்கியிருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சந்துரு வழங்கிய பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் பா.ஜ.க அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மைய குழு கூட்டத்துக்குப் பின்னர் தமிழிசை சௌந்தரராஜனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, “முன்னாள் நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இருக்கிறது. இந்த அறிக்கையை மாநில அரசு முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். ஹிஜாப் அணிய தடைவிதித்தால் அது தவறு, ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும் என்று கூறும் ஒரு குழு இன்று, இந்துப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துவரக் கூடாது, கைகளில் கயிறு கட்டக் கூடாது என்கிறது. எப்படி நெற்றியில் திலகம் வைக்கக் கூடாது என்று கூறலாம்… எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கும் விதமாக இந்த அறிக்கை இருக்கிறது. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு இதை ஏற்கக் கூடாது என்று மைய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.” என்றார்.