கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சியில் பினாயில் கொள்முதல் செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மாநகராட்சிக்கு 55கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், “மாமன்றக் கூட்டத்தின் அனுமதி இல்லாமல் ஆணையர் ஒப்புதலுடன் கொள்முதல் செய்ய முடியும். ஆனாலும் இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அப்போது பொறுப்பு அலுவலராக இருந்த பெண் அதிகாரி மீது துறைரீதியாக 17 ஏ பிரிவில் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
நெல்லை மாவட்ட தி.மு.க-வில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக நீண்ட காலமாக நெல்லை மாநகராட்சி கூட்டங்களை நடத்த இயலவில்லை. தற்போது கட்சித் தலைமை தலையிட்டு மேயர் ராஜினாமா செய்துவிட்டதால் சுமுக நிலை திரும்பியுள்ளதாக கவுன்சிலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88