பச்சை கொடி காட்டிய மூத்த அமைச்சர்கள்.. துணை முதல்வராகிறா உதயநிதி ஸ்டாலின்?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவார் என்ற கருத்து சில நாட்களாக வலுத்து வரும் நிலையில், திமுகவின் மூத்த அமைச்சர்களே அதை உறுதி செய்து வருகிறார்கள்.

சினிமாவில் தயாரிப்பாளராக மட்டுமே இருந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென நடிகரானதைப் பலரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். கெஸ்ட் அப்பியரன்சாக தலைகாட்டி ஹீரோவாக உருவெடுத்தார் உதயநிதி. நடிகரான பின்பு, அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லிக்கொண்டிருந்த கொஞ்ச காலத்திலேயே திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் ஆனார்.

எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்படுமா என ஒரு காலத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இன்று அதையெல்லாம் தாண்டி அமைச்சரானதுடன், கட்சியின் முக்கிய அங்கமாகவும் வளர்ந்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு

இப்படி, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளுக்குள் அடுத்தடுத்த திருப்பங்களுடன் செல்லும் உதயநிதியின் அரசியல் பயணத்தின், அடுத்த அத்தியாயமாக அண்மைக்காலமாக ஒலித்துவரும் சொற்கள் தான் துணை முதலமைச்சர்.

உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும் என்ற கருத்து சில மாதங்களாக ஓங்கி ஒலிக்கும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அதற்கு பாஸிடிவாகவே பதில் அளித்து வருகின்றனர்.

மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி தகுதியானவர் என்றார். இதே கருத்தை தான் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், பொன்முடியும் கூறினர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
விஜய் வருகையால் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனைப்போட்டி – அண்ணாமலை பேச்சு

இந்நிலையில் தான், வரும் 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என போட்டுடைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்! அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, நல்லது நடக்கும்; அது நாட்டிற்கும் கட்சிக்கும் நல்லதாக இருக்கும் என்றார்.

உதயநிதி துணை முதலமைச்சரானால் சந்தோஷமே என்றார் மற்றொரு அமைச்சர் தா.மோ.அன்பரசன். இதை ஆமோதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது அமைச்சர் கீதா ஜீவனின் பேச்சு. நேற்று கோவில்பட்டியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், உதயநிதியை வருங்கால துணை முதலமைச்சர் என்றே குறிப்பிட்டார்.

விளம்பரம்

ஜூனியர் அமைச்சரான அன்பில் மகேஷ் முதல் மூத்த அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு பச்சைக் கொடி காட்டினாலும், துணை முதலமைச்சராகப் போவதாகச் சொல்லப்படுவது வதந்திதான் என்றே கூறி வருகிறார் உதயநிதி.

சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…


சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…

யார் என்ன சொன்னாலும் இதில் இறுதி முடிவு எடுக்கப்போவது என்னவோ முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்தான். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலிப்பாரா என்ற கேள்விக்கு, தனது தந்தை பாணியில் “வலுத்துள்ளது., ஆனால் பழுக்கவில்லை” என பதில் அளித்தார்.

விளம்பரம்

மக்களவையில் திமுக எம்.பிக்கள் பதவியேற்றபோது, வழக்கத்துக்கு மாறாக பலர் முதலமைச்சர் ஸ்டாலினின் பெயருடன், உதயநிதியின் பெயரையும் சேர்த்துச் சொல்லத் தவறவில்லை. இதனால், அவர் துணை முதலமைச்சராவது உறுதிதான் என்றனர் அரசியல் நோக்கர்கள்.

கட்சிக்குள் ஆதரவுக்குரல் பெருகியுள்ள நிலையில், உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டும் என்ற கருத்து கனியுமா? கனிந்தால் அது எப்போது? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்….!

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *