அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா.
இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.