பட்ஜெட்: பொருளாதாரம், பங்குச் சந்தை, சூதாட்டம்.. பொருளாதார ஆய்வறிக்கையின் ஹைலைட்ஸ்! | nirmala sitharaman tables economic survey 2024 highlights

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. நாளை மக்களவையில் மத்திய பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, வளர்ச்சி வாய்ப்புகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரிப்போர்ட். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் இனி..

* இந்தியாவின் நிதித் துறைக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

* 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

* 2023-24 நிதியாண்டில் உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருந்தாலும், உள்நாட்டு வளர்ச்சிக் காரணிகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளன.

பொருளாதார வளர்ச்சிபொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

* போர் உள்ளிட்ட உலக அரசியல் பதற்றங்களால் ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கலாம்.

* 2023-24 நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ஜி.டி.பியில் 0.7 சதவிகிதமாக இருந்துள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பியில் 2 சதவிகிதமாக இருந்தது.

* 2023-24 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2022-23 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6.7 சதவிகிதமாக இருந்தது.

* உணவுப் பணவீக்கம் 2022-23 நிதியாண்டில் 6.6 சதவிகிதத்தில் இருந்து 2023-24 நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

* மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *