இது பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.க தலைவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்க வேதனையாக இருக்கிறது. பா.ஜ.க வஞ்சகர்களின் கட்சி. சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம், `உத்தவ் ஜி நீங்கள் நாட்டுக்குப் புதிய வழியைக் காட்டியிருக்கிறீர்கள்’ என்று தெரிவித்தனர். நான் மாநகராட்சி கவுன்சிலராகக்கூட தேர்வுசெய்யப்படவில்லை. ஆனால், நான் நேரடியாக முதல்வரானேன். நான் அனைத்தையும் சாத்தியமாக்குவேன்.
வரும் சட்டமன்றத் தேர்தல் உங்களுக்கு இறுதி சவால். அவர்கள் கட்சியை உடைத்தார்கள். சிவசேனா ஒன்றும் துருப்பிடித்த வாள் கிடையாது. அது கூர்மையான ஆயுதம். மும்பையையும் மகாராஷ்டிராவையும் பாதுகாக்க நாம் போராட வேண்டும். அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். கட்சி பிரிந்தபோது வெளியில் சென்றவர்கள், இப்போது மீண்டும் வர விரும்புகின்றனர். கட்சியிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம். நாங்கள் சிவசேனா தொண்டர்களைக்கொண்டு அரசியல் போராட்டத்தைத் தொடருவோம். கட்சியின் சின்னம், பெயர் விவகாரத்தில் மக்களிடம் குழப்பம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது”‘ என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேயின் பேச்சு குறித்து மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலார், சுதிர் முங்கந்திவார், பிரவீன் தாரேகர் போன்றோர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். “உத்தவ் தாக்கரே 100 பிறவி எடுத்தாலும் தேவேந்திர பட்னாவிஸை அரசியலிலிருந்து ஒழிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். உத்தவ் தாக்கரே மக்களிடம் வகுப்புவாதத்தை விதைப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் குற்றம்சாட்டினர். சந்திரசேகர் பவன்குலே இது குறித்துக் கூறுகையில்,“ பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் வெற்றிபெற்றுவிட்டு உத்தவ் தாக்கரே பா.ஜ.க-வின் முதுகில் குத்தினார்” என்று குற்றம்சாட்டினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88