“பப்ளிசிட்டிக்கு அலைகிற இயக்கமாக அதிமுக மாறிவிட்டது..!” – ராஜீவ் காந்தி கடும் தாக்கு | Rajiv Gandhi Interview on Kallakurichi issue and admk mla’s Performance

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுபோல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்டாகியுள்ளனரே!”

“இந்த இரண்டு சம்பவத்தையும் ஒப்பிடுவதே ஜனநாயக படுகொலை. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு நிகழ்ந்தபோது பிரதமர் மோடி அவைக்கு வரவேண்டும், அதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால் இறுதிவரை அது நடக்காததனால் முற்றுகையிட்டோம். ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து முடித்த பிறகு அதே கோரிக்கை வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையே 3-4 நாட்களாக தொடரும்போது சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். எதிர்க்கட்சியின் நடவடிக்கையை பார்த்தால், பப்ளிசிட்டிக்கு அலைகிற இயக்கமாக அ.தி.மு.க மாறிவிட்டதாக தோன்றுகிறது.” 

நாடாளுமன்றம்நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

“கள்ளக்குறிச்சி சம்பவத்தால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க பெரும் பின்னடைவை சந்திக்கும் எனச் சொல்கிறார்கள்?”

“மக்கள் எங்கள்முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம், மறுக்கவில்லை. ஆனால் தி.மு.க எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெப்பாசிட் இழப்பது உறுதி.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *