பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவில் வேளாண் நிலங்களைப் பாதிப்பதோடு, சூழலியல் முதன்மைத்துவம் கொண்ட ஈரநிலங்களையும் அழித்துவிட்டு அமையவிருக்கும் பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையமானது பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் மக்களின் எண்ணங்களைப் புறந்தள்ளிவிட்டு ஒருமனதாக செயல்படுத்தப்படுவது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு நேரெதிர் செயலாகும். மக்களவைத் தேர்தல் நெடுகிலும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரானது போன்றும், விமர்சிப்பது போன்றும் பரப்புரை மேற்கொண்டு, வெற்றியும் பெற்றுள்ள திமுக அரசு தற்பொழுது அதே பாஜக கொண்டு வரக்கூடிய அழிவுத் திட்டத்தினை மக்களின் கடும் எதிர்ப்பின் நடுவிலும் செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று முனைப்புக் காட்டுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யக்கூடிய துரோகமாகும்.
பாஜக கொண்டுவரக்கூடிய அழிவுத் திட்டங்களை ஆதரிப்பதை விட்டுவிட்டு, பாஜக எதிர்ப்பின் வழியே திமுகவிற்கு வெற்றியைத் தந்த மக்களின் பக்கம் நிற்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்களின் கடும் எதிர்ப்பிற்குள்ளாகியுள்ள, சூழலியல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் இத்திட்டத்தினை முழுமையாக எதிர்ப்பதோடு, பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு உடனடியாகக் கைவிட வேண்டும்!” என வலியுறுத்தினார்.
இந்தநிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் திடீரென தமிழ்நாட்டைவிட்டே வெளியேறிப்போவதாக உருக்கமாகத் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடையேப் பேசிய பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பினர், “பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 700 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றோம். விவசாயத்தையும் ,நீர்நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நில அபகரிப்பான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து, விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுதை பெருமையாக கருதுகிறோம். எனவே சொந்த மண்ணில், மானம் இழந்து அகதியாக வாழ்வதை விட, மொழி தெரியாத அன்னிய ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என்று ஒட்டுமொத்த பொது மக்களின் முடிவு செய்து உள்ளோம். எனவே வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்திடம் தஞ்சம் அடைய எங்களுடைய போராட்ட குழுவினர் மரியாதைக்குரிய சித்தூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களை சந்திக்க செல்கின்றனர். ஆந்திர மாநிலத்தை நோக்கி கண்ணீர் பயணம் மேற்கொள்ளும் எங்களுடைய போராட்ட குழுவினரை வழி அனுப்ப ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம பொதுமக்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை 24.06.24 அன்று காலை 9.30 மணியளவில் ஏகனாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே திரள இருக்கிறோம்!” எனத் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88