இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை திடீரென நேற்று இரவு அறிவித்தது. மேலும் தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் முடிவு பல்லாயிரக் கணக்கான மருத்துவர்களை விரக்தியில் தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் அமைப்பு ரீதியான தோல்வியால் யுஜிசி, நெட் என அடுத்தடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சாடியுள்ள அவர், முறைகேடு அம்பலமாகியுள்ள நிலையில், நல்லதொரு எதிர்காலத்திற்கு கை கோர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க:
இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு… இரவு நேரத்தில் வந்த பரபரப்பு அறிவிப்பு
மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் என்றும், தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவோம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
The cancellation of NEET-PG by NBE, following the cancellation of UGC-NET, has thrown thousands of our doctors into deep despair. Let us not forget the fact that these happenings are not one-off events but the final nails in the coffin of an incompetent and broken system of… https://t.co/zrVFDbZIWu
— M.K.Stalin (@mkstalin) June 23, 2024
மிக முக்கியமாக, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனதில் நம்பிக்கை மற்றும் உண்மையை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
.