`பழைய நண்பர்களை பாஜக சாதாரணமாக எடுத்துகொள்கிறது’ – கேபினட் விவகாரத்தில் சிவசேனா, என்.சி.பி அதிருப்தி | Shiv Sena, NCP complain that BJP is taking old friends for granted

பழைய நண்பர்கள் எந்த சூழ்நிலையிலும் கூட்டணியில் இருப்பார்கள் என்று கருதி பா.ஜ.க தனது பழைய நண்பர்களை மிகவும் சாதாரணமாக நடத்துகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.கவை விட நாங்கள் சிறப்பாகத்தான் வெற்றி பெற்றோம். நாங்கள் 15 தொகுதியில் போட்டியிட்டு 7 தொகுதியில் வெற்றி பெற்றோம். ஆனால் பா.ஜ.க 28 தொகுதியில் போட்டியிட்டு வெறும் 9 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

அமித் ஷாவுடன் ஷிண்டே மற்றும் அஜித் பவார்அமித் ஷாவுடன் ஷிண்டே மற்றும் அஜித் பவார்

அமித் ஷாவுடன் ஷிண்டே மற்றும் அஜித் பவார்

துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அமைச்சர் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் மிகவும் அதிருப்தியுடன் இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இணையமைச்சர் பதவி கொடுப்பதாக பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் அதனை தேசியவாத காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.அன்னா பன்சோடே கூறுகையில், ”எங்களது கட்சி உறுப்பினர் அமைச்சரவையில் இல்லாமல் இருப்பதால் கட்சினர் அதிருப்தியில் இருக்கின்றனர். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டும்”என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *