ஆனால் திடீர் திருப்பமாக இன்று அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அந்த ஓர் இடத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கட்சி கூட்டத்தில் இதற்கு முடிவு எடுக்கப்பட்டது. சமீபத்தில் புனேயில் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் சுனேத்ரா பவாரை ராஜ்ய சபா உறுப்பினராக்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுனேத்ரா பவார் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது சகன் புஜ்பாலுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக புஜ்பால் அளித்த பேட்டியில், “‘ராஜ்ய சபா தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். நான் போட்டியிடவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கட்சி கூட்டத்தில் சுனேத்ராவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சி முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில நிர்ப்பந்தங்கள் இருக்கிறது” என்றார்.