புதுச்சேரி: `சாராயக் கடைகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!’ – கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று மேற்கு வங்க உதயநாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்திருக்கின்றனர். காவல்துறையினர் சில நேரங்களில் சமூக சிந்தனைகளை மறந்துவிடுகின்றனர். ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. மனசாட்சிக்கு எதிராக நடந்து கொள்ளாமல், காவல்துறை தன்னுடைய கடமையை ஆற்றும்போது இப்படியான குற்றங்களை தடுக்க முடியும். தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்கும்போது, மக்கள் ஏன் கள்ளச்சாராயத்தை தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. தான் இறந்துவிட்டால் வீட்டிலுள்ள அனைவரது வாழ்வும் இருண்டுவிடும் என்பதை உணர்ந்து, கள்ளச்சாராயம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த சம்பவத்தில் சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் உயிரிழந்திருக்கின்றனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க, அதனை காய்ச்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்குதான் என்னுடைய தனிப்பட்ட கொள்கை. ஆனால் புதுச்சேரியில் அதனை உடனடியாக அமல்படுத்த முடியும் என்று நினைக்கவில்லை.

கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம்

புதுச்சேரிக்கு தமிழ் கலாசாரம்தான் ஆணிவேர். ஆனாலும் நீண்ட காலமாக இங்கே பிரெஞ்சு கலாசாரம் இருந்து வந்திருக்கிறது. எப்படியான நடைமுறைகள் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும். புதுசேரியில் ரெஸ்டோ பார்களை இரவு 12 மணிக்குள் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். காவல்துறையை முடுக்கி விடுங்கள். காவல்துறையில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால் இப்படியான சம்பவங்களை தடுக்க முடியும். புதுச்சேரியில் சாராயக்கடைகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அதனை முறைப்படுத்துவது, மக்களின் அன்றாட வாழ்வுக்கு எதிராக இல்லாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். யோகா கலையை நாம் பின்பற்றினால், போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு நாம் அடிமையாவதை தவிர்க்கலாம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *