“புது சின்னத்தோடு தேர்தலைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியைப் பாராட்டுகிறேன்!” – அண்ணாமலை | I Congratulate NTK, they honestly faced election with New Symbol says annamalai

இத்தகைய சூழலில், நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவிகித வாக்குகளைப் பெற்று மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது. பா.ஜ.க, கூட்டணியாக 18 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “சிந்தாந்த அடிப்படையில் முரண்பட்டாலும் நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன். பணம் கொடுக்காமல் நேர்மையாக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார்கள். அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் புது சின்னத்தில் நின்றதை நான் பாராட்டுகிறேன். திராவிடத்திலிருந்து தமிழ்நாட்டு மக்கள் வெளியேறுகிறார்கள் என்பது நாம் தமிழர் கட்சி சொல்லும் செய்தி. அவருடைய பாதையில் அவர் பயணிக்கட்டும், எங்கள் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம் எனவே இருவரின் வாக்குகளையும் ஒப்பிட விரும்பவில்லை” என்றார்.

சீமான், அண்ணாமலைசீமான், அண்ணாமலை

சீமான், அண்ணாமலை

நாம் தமிழர் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டதற்கே பாஜக தான் காரணம் என நாம் தமிழர் கட்சியினர் பேசிவரும் நிலையில், புதுச் சின்னத்தோடு தேர்தலைச் சந்தித்த நா.த.க-வை பாராட்டியிருக்கிறார் அண்ணாலை. 2024-க்குப் பிறகு நா.த.க-வே இருக்காது எனக் கடந்த காலங்களில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *