`புனையப்பட்ட வழக்கு..!’ – குற்றச்சாட்டு பதிவு; மறுத்த செந்தில் பாலாஜி – நீதிமன்றத்தில் நடந்தது என்ன? | Senthil Balaji appeared in court – what happened?

குற்றச்சாட்டு பதிவு!

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தார். இந்த சூழலில் புழல் சிறையிலிருந்த செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நிற்கவைக்காமல், நீதிமன்றத்தில் நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்தார் செந்தில் பாலாஜி.

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். அதற்குச் செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இந்த வழக்கானது புனையப்பட்டது என்றும், காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பதியப்பட்ட வழக்கும் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும், சாட்சிகளை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *