அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றார். இதே போன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக நிறுத்தப்பட்ட மிலிந்த் நர்வேகர் வெற்றி பெற்றார். ஆனால் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக நின்ற ஜெயந்த் பாட்டீல் தோல்வியை தழுவினார்.
இத்தேர்தல் மூலம் அஜித் பவார் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களித்துள்ளனர். அணி மாறி வாக்களித்தது யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கட்சி தலைமைக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த வெற்றி பா.ஜ.க கூட்டணிக்கு உற்சாகம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88