மகா., சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.1,898 கோடி நிதி – பாஜக, அஜித் பவார் தரப்பு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறதா?!| Rs 1898 crore to sugar mills of BJP and NCP politicians

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் நிதி சர்க்கரை ஆலை பராமரிப்பு மற்றும் சம்பளம் கொடுக்க பயன்படுத்தப்படும் என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். சர்க்கரை ஆலைகளை தொடர்ந்து நடத்த பராமரிப்பு மிகவும் அவசியம் என்றும், கரும்பு அறுவடைகாலம் போக எஞ்சிய காலத்தில் மில் ஓடாமல் இருக்கும். அதனால் பராமரிப்பு அவசியமாக இருக்கிறது. சர்க்கரை ஆலைகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னையில் இருந்து வெளியில் வர சர்க்கரை விலையை அதிகரிப்பது ஒன்றுதான் தீர்வாக இருக்கும் என்று மற்றொரு சர்க்கரை ஆலை நிர்வாகி தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை ஒரு டன் 3450 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் சர்க்கரை விலை அதிகரிக்கப்படவில்லை. இதனால் சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்பு கொள்முதலில் 600 ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது கொடுக்கப்பட்டு இருக்கும் கடனை சர்க்கரை ஆலைகள் 8 ஆண்டில் திரும்ப கொடுக்கவேண்டும்.

அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேஅஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பா.ஜ.க தலைவர்கள் நடத்தும் சர்க்கரை ஆலைகளுக்கு மாநில அரசு ரூ.549 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருந்தது. இதே போன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.631 நிதியுதவி வழங்கப்பட்டது. மேற்கு மகாராஷ்டிராவில்தான் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் இருக்கிறது. அங்கு தேசியவாத காங்கிரஸ் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *