மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதைப்போலவே வரும் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் அதைப்போல, நாளையும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 5-ம் தேதிவரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
.
- First Published :