“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டீர்களே… தமிழ்நாடு பாஜக மீதான வருத்தம்தான் காரணமா?”
“அப்படியல்ல, தேசிய பொறுப்பிலும், தொகுதி சார்ந்த பிரச்னைகளிலும் கவனம் செலுத்துகிறேன். எனவே தமிழ்நாடு பா.ஜ.க என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதும், அதன் செயல்பாடுகளை பார்த்துக் கொள்ளவும் மாநிலத் தலைவர் அடங்கிய குழு இருக்கிறது. இருப்பினும் தேவைகேற்ப தமிழக அரசியலிலும் பாஜக-விலும் என் குரல் ஒலிக்கத்தான் செய்கிறது.”
“சனாதனத்தை எதிர்த்து போராடும் திமுக-வோடு பாஜக இணக்கம்காட்டுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளனவே!”
“சனாதனம் உள்ளிட்ட கருத்து நிலைப்பாடுகளில் தி.மு.க-வுக்கு எதிராக இருந்தாலும்கூட மறைந்த தலைவரின் அரசியல் பங்களிப்புக்காக மத்திய அரசின் மரியாதைதான் நினைவு நாணயம் வெளியீடு. ராஜ்நாத் சிங் அரைமணி பேசியதை வைத்து அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கூட்டணி குறித்து கேட்கிறீர்கள் `வருங்காலங்களில் தி.மு.க-வுடன் கூட்டணி அமையுமா அமையாதா என்பதை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும்.”