“மணிப்பூர் போன்ற நிலை மகாராஷ்டிராவில் உருவாகும் அபாயம்..!” – சரத் பவார் கவலை | Risk like Manipur incident on Maharashtra: Sharad pawar

இந்நிலையில் இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த சரத் பவார்,”‘மத்திய மாநில அரசுகள் மணிப்பூரில் நடக்கும் இனப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுக்காமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை பக்கத்து மாநிலத்திற்கு பரவியது. கர்நாடகாவிலும் கூட நடந்தது. சமீப கால நிகழ்வுகள் மணிப்பூரில் நடப்பது போன்ற சம்பவங்கள் மகாராஷ்டிராவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மகாராஷ்டிராவில் வரலாற்று சிறப்பு மிக்க உறுதிப்பாடு அவசியம். இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மராத்தா இன மக்கள் இடையே நாளுக்கு நாள் பிரிவினை அதிகரித்துக்கொண்டே இருப்பது கவலையளிக்கிறது. இரு தரப்பினரிடமும் அரசு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தவேண்டும். முதல்வர் ஒரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அரசு மற்றொரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

சரத் பவார்சரத் பவார்

சரத் பவார்

மணிப்பூரை சேர்ந்த பல்வேறு சமுதாய தலைவர்கள் எங்களை வந்து சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட விவகாரம் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் இப்போது ஒருவரை ஒருவர் விரும்பாவில் மோதிக்கொண்டுள்ளனர். மத்திய அரசு இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அனைத்தும் நடந்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவாரா என்பது சந்தேகம்தான்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *