கூட்டணியில் இருந்துகொண்டு அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தும் அதேநாளில் வி.சி.க-வும் ஆர்ப்பாட்டம் நடத்துவது வியப்பாகத்தான் இருக்கிறது. முதலில் அந்த கோரிக்கையே சரிதானா என்ற கேள்வி இருக்கிறது. உடனடியான மதுவிலக்கு கொண்டு வருவது மருத்துவ ரீதியாகவும் உகந்ததல்ல. அதேசமயம் கள்ளச்சாராய புழக்கத்தையும் பெருக்கிவிடும்” என்றனர் குழப்பத்துடன்.
ஆர்ப்பாட்டதில் பங்கேற்ற வி.சி.க-வினரோ, “கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் கள்ளச்சாராயத்தை ஒழித்தால் போதுமென சொல்லவில்லை. மதுக்கடையை மூடுங்கள் என்றே சொல்கிறார்கள். மதுக்கடைகள் மூலம் மதுவுக்கு அடிமையாகும் மக்கள், பின்னர் கையில் காசு இல்லத நேரத்தில் விலை குறைவாக கிடைக்கும் கள்ளச்சாரயம் பக்கம் செல்கிறார்கள். அதனால்தான் தாய்மார்களின் பிரதான கோரிக்கையாக இது இருக்கிறது. மதுவிலக்கு சாத்தியமில்லை, கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற கருத்தையெல்லாம் ஏற்க முடியாது. குஜராத்திலும் பீகாரிலும் மதுவிலக்கு அமலில் இல்லையா?” என வினவுகிறார்கள்.
விசிக-வின் இந்த போராட்டம், செப்டம்பர் மாத மாநாடு அறிவிப்பு ஆகியவற்றுக்கு திமுக எப்படி ரியாக்ட் செய்யப்போகிறது என்பது தான் இப்போதைய அரசியல் களத்தில் எழுந்து நிற்கும் கேள்வி..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88