“மத்திய அரசின் பட்ஜெட்டில் அதிகம் பலன் பெறுவது தமிழகம்தான்..!” – சொல்கிறார் வானதி சீனிவாசன்

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பெண் தொழில் முனைவோர்கள், பெண் வழக்கறிஞர்கள், பெண் பேராசிரியர்கள், மற்றும் பெண் சமூக ஆர்வலர்களிடம் விளக்கமளிக்கும் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.ஜ.கவின் தேசிய மகளிர் அணியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டுப் பேசினார். இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா தொற்று காலத்திற்கு பின்பாக வளர்ந்த நாடுகளே பொருளாதார ரீதியாக கடும் சவால்களை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாடு உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக உயர்ந்து இருக்கிறது.

பட்ஜெட் விளக்கக்கூட்டத்தில் வானதி சீனிவாசன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்திய பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இது உலக நாடுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. அரசின் திட்டங்கள் ஒரு பைசா கூட ஊழல் செய்யப்படாமல் முழுமையாக மக்களுக்கே சென்று சேருகிறது.

தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை என தி.மு.க அரசியல் காரணத்திற்காக தவறாகக்கூறி வருகிறது. தமிழக மக்கள் தி.மு.க அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தி.மு.கவினர் பொய்யான பிரசாரம் செய்து வருகின்றனர்.  மத்திய அரசின் திட்டங்களில் அதிக பலன் அதிக அளவில் பயன்படக்கூடிய மாநிலம் தமிழகம்தான்.

பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

 தமிழகத்தில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி கொடுக்க தயாராக இருந்த போதும், அரசின் கொள்கைக்கு மாறாக மாநில அரசு நாங்கள் விமான நிலையத்தை கட்டுவோம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. இது வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. ’அமைதி பூங்கா’ என்ற சொல்லக்கூடிய தமிழ்நாடு தற்போது திமுக ஆட்சியில் மிக மோசமாக உள்ளது. தூத்துக்குடி வெளி துறைமுக வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு சுற்றுப்புறச் சூழல் தாக்கல் மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் நிச்சயம் செயல்படுத்தப்படும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *