மீண்டும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி:
இந்த நிலையில் கடந்த ஞாயிறு மதியம் சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு என்ன ஆனது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக மருத்துவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கடந்த சில தினங்களாகவே அவருக்கு நெஞ்சுவலி அவ்வப்போது வந்து போயிருக்கிறது. சிறை மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். கடந்த ஞாயிறு மதியம் அவரும் நெஞ்சுவலி அதிகரித்திருக்கிறது. மூச்சு விடவும் சிரமப்பட்டிருக்கிறார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. நுரையீரலில் நீர் சேரவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், நியூக்ளியர் மெடிசின் துறையில் சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்ததுமே, அவருக்கு இ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மூச்சு விடச் சிரமமாக இருந்தவரின் நிலை தற்போது சீராகியிருக்கிறது. இருந்தபோதிலும் அவருக்குத் தொடர்ந்து நெஞ்சுவலி இருக்கிறது. இதனால், அவருக்கு Myocardial Perfusion Scan என்றப் பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த பரிசோதனை முடிந்த பிறகே வலிக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். எப்படியும் அனைத்து பரிசோதனைகளும் முடியக் குறைந்தது ஐந்து நாள்களாவது ஆகும்” என்றார்கள் விரிவாக. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில் சிறைக் காவலர்களின் பலத்த பாதுகாப்பின் கீழ் அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88