வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைக்கு கடந்த மார்ச் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருடன் மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியுள்ள நிலையில், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் ஏ-பிளாக்கில் 3 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, மின்னஞ்சல் மூலம் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் கட்டடத்திற்கு கூடுதலாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் சாதாரண உடையில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
.
- First Published :