மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்; `அரசே நடத்த வேண்டும்…’ – கஞ்சித்தொட்டி திறந்து தொழிலாளர்கள் போராட்டம்! | tea plantation workers protest in manjolai estate

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

கஞ்சித் தொட்டிகஞ்சித் தொட்டி

கஞ்சித் தொட்டி

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசின் டான்-டீ நிறுவனம் முன் வர வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், பிபிடிசி நிர்வாகம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தற்காலிக அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *